Government Arts and Science College for Women, Sathankulam
இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பின் தங்கிய நிலையில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் புதிய வரலாறு படைக்க மகளிர் கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த சான்றோர்கள் பலர் கூடி சாத்தான்குளம் கல்விக்கழகம் என்று ஒரு அமைப்பை தோற்றுவித்து சாதி, மதம், இனம் என்ற எந்த வேறுபாடுமின்றி நன்கொடை வசூலித்து கல்லூரி ஒன்றை ஏற்படுத்த முயன்றனர் இதன் பொருட்டு, தமிழக அரசை அனுகியபோது, பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது கல்வி கழகத்தினர் தங்கள் அலுவலக கட்டிடத்தையே வாடகையின்றி ஓராண்டுக்கு கல்லூரி செயல்பட அளித்தனர் அத்தோடு 30 ஏக்கர் நிலத்தையும் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வழங்கினார்.
அவர்களின் அயராத முயற்சியால் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி சாத்தான்குளத்தில் செயல்பட துவங்கியது 160 மாணவியரோடும் கணிதம் வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் என்ற மூன்று பாடப்பிரிவுகளோடும் கல்லூரி இயங்க ஆரம்பித்தது.
சாத்தான்குளம் கல்விக் கழகத்தினர் வழங்கிய 30 ஏக்கர் நிலம் சாத்தான்குளத்தில் இருந்து இட்டமொழி செல்லும் வழியில் புதுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அதில் தமிழக அரசும் பல்கலைக்கழகமும் இணைந்து கல்லூரிக்குப் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி முடித்தனர் அப்புதிய கட்டிடத்தில் 2005 பிப்ரவரி 19ஆம் நாள் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது அன்றிலிருந்து கல்லூரி புதிய கட்டிடத்தில் இயங்குகிறது. அடுத்ததாக சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக திரு நீலமேகவர்ணம் அவர்களின் நிதி உதவியாலும் மேலும் ஒரு கட்டிடம் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி, இராணி வெங்கடேசன் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததால் இரு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன இப்பகுதி வாழ் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திரு. சபாபதி மோகன் கணிதவியல் துறையிலும், வணிகவியல் துறையிலும் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கினார் 2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தால் இளநிலை (கணி அறிவியல்) தொடங்கப்பட்டது. தற்போது இளநிலைப பட்ட வகுப்புகளும் முதல்நிலை பட்ட வகுப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன மாணவிகளின் எண்ணிக்கையும் 1200ஐ தாண்டி உள்ளது. கல்வித்தரமும் உயர்ந்து விளங்குகின்றது இக்கல்லூரி சாத்தான்குளத்தில் ஒரு சிறந்த கல்லூரியாக திகழ்கின்றது.